செப்டம்பர்,16-
தமிழ்த்திரை உலகில் பாரதிராஜாவை அடுத்து,ஏராளமான இயக்குநர்கள் ஷங்கரின் பட்டறையில் இருந்து வெளிப்பட்டவர்கள் தான்.
பாக்யராஜ், மணிவண்ணன்,மனோபாலா, கே.ரங்கராஜ், மனோஜ்குமார், பொன் வண்ணன், சீமான் உள்ளிடோர், பாரதிராஜாவின் வார்ப்புகள்.
வெங்கடேஷ், மாதேஷ், சிம்பு தேவன், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், ஹோசிமின்,அடலீ ஆகியோர் ஷங்கரின் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்கள். எனினும் ஷங்கரை போன்று வணிக ரீதியாக, தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்தவர், அட்லீ மட்டுமே.
ஷங்கரிடம் எந்திரன்,நண்பன் ஆகிய படங்களில் பணியாற்றிய அட்லீ, ராஜாராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்., நண்பன் படத்தில் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, தனியாக படம் செய்யும் ஆசையில் ஷங்கரை விட்டு வெளியேவந்தார். ராஜா ராணி படத்தின் கதையை பலதயாரிப்பாளர்களிடம் சொன்னார், எல்லோருமே நிராகரித்தர்கள்.
டைரக்டர் ஏ.ஆர். முருகதாசுக்கு அந்தக்கதை பிடித்திருந்தது. தனது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ பேனரில் ராஜா ராணியை தயாரித்தார், முருகதாஸ். சில கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ராஜா ராணி, 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து,அட்லீக்கு முகவரி தந்தது.. விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது
இதனை தொடர்ந்து இளையதளபதி விஜய் நடிப்பில் ‘தெறி’,‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களை அட்லீ இயக்கினார் இந்த மூன்று படங்களுமே வசூலை வாரிக்குவித்தது. விஜயின், சந்தை மதிப்பை இன்னொரு மட்டத்துக்கு , அந்த படங்கள் கொண்டு சென்றன.
தமிழில் நான்கு வெற்றிகளை அடுத்தடுத்து கொடுத்த அட்லீ, பாலிவுட்டில் அடி எடுத்து வைக்க ஆசைப்பட்டார். ஷாருக்கானிடம் கதை சொன்னார். அவருக்கு பிடித்துப்போனது. தனது தயாரிப்பில், தானே ஹீரோவாக நடிக்க உருவான படம் தான்’ஜவான்’. வெளியான ஆறு நாட்களில் இந்தப்படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளது.
ஜவான் வெற்றியை அடுத்து அட்லீ மீண்டும் இந்திப் படத்தை டைரக்டு செய்ய உள்ளார். ‘தெறி’ படத்தை வருண் தவானை
வைத்து அட்லீ இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்.
இந்தப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை அட்லீஇயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது,இளையதளதியுடன் , அட்லீ இணையும் நான்காவது படம்.
இதையும் தெறிக்க விடுங்க பாஸ்.
000