முதுமலையில் வாகனங்களை துரத்திய காட்டுயானை -சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஏப்ரல்.18

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி – தெப்பக்காடு நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாகத் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர தொடங்கி உள்ளன. அந்த வகையில், முதுமலைக்குள் உள்ள பிரதான சாலைகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்துவருகிறது.

இதன்காரணமாக, காலை மற்றும் மாலை நேரங்களில் சாலை ஓரத்திற்கு வரும் யானைகளை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்வதால், அவை வாகனங்களை தூரத்தவும் செய்கின்றன. அதன்படி, நேற்று மாலை மசினகுடி – தெப்பக்காடு சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், சாலை ஓரத்தில் இருந்த ஒற்றை காட்டுயானையை சீண்டியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷசமாக ஓடி, அவ்வழியாக சென்ற வாகனங்களை விரட்டியது. இதனால், பீதியில் உறைந்த சுற்றுலா பயணிகள், தங்களது வாகனங்களை பின்னோக்கி எடுத்துச்சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து, யானை மீண்டும் மூங்கில்களை உடைத்து சாப்பிட்டுவிட்டு வனப்பகுதிகுள் திரும்பிச்சென்றது.

இதனிடையே, சாலையோரத்திற்கு வரும் வன விலங்குகளை பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *