கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ஐந்து முறை எம்.எல்.ஏ., முன்னாள் முதலைமைச்சர், லிங்காயத்து சமூகத்து தலைவர் என்ற சிறப்புகளுக்கு உரிய ஜெகதீஷ் ஷெட்டர் அந்தக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டார்.
பாரதீய ஜனதா கடசியில் லிங்காயத்து சமூக முகமாக திகந்தவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான லட்சுமண் சாவாதி கடந்த வாரம் அந்தக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி இருக்கிறது.
சாவந்தை தொடர்ந்து ஷெட்டர் இப்போது கட்சி மாறி உள்ளார். தமது ஊரான ஹுப்ளியில் இருந்து ஞாயிறு இரவு சிறப்பு விமானத்தில் அவசராமாக புறப்பட்டு வந்த அவர் பெங்களூரில் முன்னாள் முதலைமச்சர் சித்தராமைய்யா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசி அந்தக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் ஹுப்ளி- தார்வாட் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் வழங்கி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைக்காத பலர் அதிருப்தி வேட்பாளர்களாக போட்டியிடப் போவதாக கூறி வருவது நினைவுக்கூறத்தக்கது.
2023-04-17