காவல் துறையின் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
பெண் காவல் துறை கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் இந்த பரபரப்பு தண்டனையை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த போது பாதுகாப்புப் பணிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ராஜேஷ் தாஸ் சக பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது புகாராகும்.
இது தொடார்பான வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்து உள்ளது. அதில் ராஜேஷ் தாசுக்கு மூன்ற வருட சிறைத் தண்டனையும் 10500 ரூ பாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
ராஜேஷ் தாஸ் உத்தரவின் பேரில் பெண் அதிகாரியின் கார் சாவியை பறிக்க முயன்றதாக செங்கற்பட்டு மாவட்டத்தில் அப்போது எஸ்.பி.யாக பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராம் போடப்பட்டு இருக்கிறது.
உடனடியாக சிறைக்குச் செல்லாமல் இருக்க ராஜேஷ் தாஸ் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி, 30 நாட்களுக்குள் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ள அனுமதி அளித்தது.