June 12, 23
மக்களிடம் வரலாற்றை மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. உண்மை பல நேரங்களில் சிலருக்கு கசப்பாகவே இருக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்காக செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட முடியுமா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்தார். அப்போது தமிழ்நாட்டில் இருந்து ஏற்கனவே இருவருக்கு பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு திமுகவால் தான் கைநழுவிப் போனது. தற்போது தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருந்தார்.மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றிப்பெறும் என தெரிவித்த அமித்ஷா, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பாஜக கூட்டணியை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழகத்தில் ஏழை குடும்பத்தில் இருந்து முதல்வர், பிரதமர் வர வேண்டும் என கூறினார்.
இந்நிலையில் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், எதிர்காலத்தில் தமிழரே பிரதமர். ஏற்கனவே பிரதமர் ஆகக்கூடிய இரண்டு வாய்ப்பை தமிழகம் இழந்து இருக்கிறது. மக்களிடம் வரலாற்றை மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. உண்மை பல நேரங்களில் சிலருக்கு கசப்பாகவே இருக்கும். தமிழக மக்கள் இனி தொடர்ந்து ஏமாற தயாராக இல்லை என பதிவிட்டுள்ளார்.
ஜிகே வாசான் சொன்னபடி பார்த்தால் ஒன்று மூப்பனார். அவருக்கு 1997 ல் பிரதமராக வாய்ப்பு இருந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது, பிரதமராகும் வாய்ப்பை இழந்த இன்னொரு தலைவர் யார் என்பது குழப்பமாக உள்ளது,