லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ படத்தில் இடம் பெற்ற ‘காதல் பிசாசே’ பாடலை பாடியவர் உதித் நாராயணன். தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள உதித் நாராயனுக்கு திரளான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சில ஆண்டுகளாக , லைவ் ஷோ நிகழ்ச்சிகளிலும் அவரின் பாடல்களை பாடி வருகிறார்.
அண்மையில் நடந்த லைவ் ஷோவில், உதித் நாராயணன் பாடி கொண்டிருக்கும்போது அவருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் போட்டி போட்டனர். அப்போது, பெண் ரசிகைகளுக்கு செல்ஃபி போஸ் கொடுத்ததோடு, முத்த மழையும் பொழிந்தார்.
ஒரு ரசிகை செல்ஃபி எடுத்த பின்னர், கன்னத்தில் முத்தமிட்டார்.
அவரின் தலையை திருப்பிய, உதித் நாராயணன் உதட்டில் முத்தமிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சில இளம் பெண்களுக்கும் ‘இச் ..இச்’ தருகிறார்.
உத்தி நாராயணனின் உதட்டு முத்தம், பலரின் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது.
பொறாமை ?
—