சூப்பர் ஸ்டார் ‘ரஜினிகாந்த் வசனத்தை பேசி , அப்பாவிடம் விஜய் ,சினிமாவுக்கு சான்ஸ் கேட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன் விஜய்க்கு பள்ளி பருவத்திலேயே சினிமா ஆசை இருந்தது.
தனது மகன் நடிப்புக்கு தகுதியானவரா என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால் விஜய் தந்தையின் எண்ணத்தை மாற்றியது எது என்றால் அது ரஜினிகாந்த்.
2010 -ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் ரசிகரான விஜய் இப்படி பேசினார்:
‘ நான் படிப்பில் மிகவும் பலவீனமாக இருந்தேன் – 10 ஆம் வகுப்புக்குப் பிறகு, எனக்கு சினிமாவில் ஆர்வம் இருந்ததால், அதை என் தந்தையிடம் தெரிவித்தேன்- அவர் அந்த யோசனையை ஏற்கவில்லை . அண்ணாமலை படத்தில் இடம் பெற்ற ரஜினி சார் டயலாக்கை எனது பாணியில் பேசினேன்.
நண்பராக இருந்து எதிரியாக மாறிய தனது நண்பரை ரஜினிகாந்த் எப்படி எதிர்கொள்வார் என்ற வசனத்தை பேசி, வீடியோவில் படம்பிடித்து என் அப்பாவிடம் காட்டினேன்.
பின்னர், நாளைய தீர்ப்பு படத்தில் என்னை அறிமுகப்படுத்த முடிவு செய்தார்.
அண்ணாமலையில் வில்லனின் தந்தையாக நடித்த நடிகர் ராதா ரவியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த்து’என்றார் விஜய்
-.