ரஜினியின் ஜெயிலர் படப்பாடல் வைரலானது.. படக்குழு மகிழ்ச்சி.

சன் பிக்சர்சின் அண்ணாத்தே படத்தையடுத்து அந்த நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த நடித்து முடித்துள்ளார்.,

இந்தப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

இதில் தமன்னா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கிஷெராப்,பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் நேற்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

பாடல் வெளியான அரைமணி நேரத்தில் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *