சென்னை அடுத்த செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் இரண்டாயிரம் கோடி மதிப்புள்ளு பத்திரப்பதிவுகளுக்கு உரிய கணக்குள் இல்லை என்று கூறி வருமான வரித்துறை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த துணைப் பதிவாளர் அலுவலகத்திலும் திருச்சி உறையூர் துணைப் பதிவாளர் அலுவலகத்திலும் வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். அப்போது பத்திரப் பதிவு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அரசு நிர்ணயித்த வழிகாட்டுதல் மதிப்பை குறைத்துக் காட்டி நிலங்களை இந்த அலுவலகங்களில் பதிவு செய்து இருப்பது தெரியவந்து உள்ளது.
அந்த வகையில் செங்குன்றம் துணை பதிவாளர் அலுவலகத்தில் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் திருச்சி உறையூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதி்ப்புள்ள பத்திரப் பதிவுக்கும் உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்து உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதையடுத்த இந்த அலுவலகங்களில் நடந்த பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு துணைப் பதிவாளர்அலுவலகங்கள் மட்டுமல்லாது இன்னும் பல துணைப் பதிவாளர் அலுவலகங்களிலும் முறையான கணக்குளை பராமரிக்கவில்லை என்ற புகார் எழுந்து உள்ளது.
000