June 08, 23
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கக் கூடிய குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 விழுக்காடாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவுகளை மும்பையில் இன்று அறிவித்த அவர், தற்போதைய ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார். நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் தற்போதைய ரெப்போ வட்டி விகிதமான 6 புள்ளி 5 விழுக்காட்டில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார். பின்னர் தொடர்ந்து பேசிய கொரோனா காலத்தில் இருந்ததை விட நாட்டின் பொருளாதாரம் தற்போது அதிக வேகத்தில் வளர்ந்து வருவதாக கூறிய சக்தி காந்ததாஸ். சர்வதேச பொரளாதார நிலைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி விகிதம் உயராது என்பது குறிப்பிடத்தக்கது.