சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் 35 லட்சத்தை நான்கு வாரத்தில் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிண்டியில் செயல்பட்டு வரும் சென்னை ரேஸ் கிளப் செயலாளர் ராமன் தாக்கல் செய்த மனுவில், 1837 ஆம் ஆண்டு தொடங்கபட்ட தங்கள் சங்கம் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஊட்டி, டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். கிண்டியில் உள்ள இடத்திற்கு சொத்துவரியாக 3 கோடியே 60 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனசென்னை மாநகராட்சி அனுப்பி உள்ள நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ராமன் கேட்டுக் கொண்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த்,ரேஸ் கிளப் 4 வாரத்தில் 35 லட்சம் ரூபாய் சொத்துவரியை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.
2023-04-04