ஆகஸ்டுஇ23-
பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும்,லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. கட்சியும் இணைந்து ஆட்சிஅமைத்துள்ளது.நிதிஷ்குமார் அமைச்சரவையில் துணைமுதல்வராக லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவும்வனத்துறை அமைச்சராக மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவும்உள்ளனர்.
26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியைஉருவாக்க முன் முயற்சி எடுத்தவர் நிதிஷ். பீகாரில் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை ஆர்.ஜே.டி. கட்சியுடன் நிதிஷ்குமார் சுமுகமாக முடித்துள்ள நிலையில், தேஜ் பிரதாப் தேவையில்லாமல் ஒரு விஷயத்தில் மூக்கை நுழைத்து கூட்டணியில் மோதலை உருவாக்கியுள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. 2018 ஆம் ஆண்டு வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அளிக்கப்பட்டபோது, அவரது பெயர் அந்த பூங்காவுக்கு சூட்டப்பட்டது.
அந்த பூங்காவின் பெயரை தேங்காய் பூங்கா என தேஜ் பிரதாப் மாற்றி உத்தரவிட்டதோடு, அதனை ஒரு விழாவாகவும் நடத்தியுள்ளார்.இதனால் பாஜகவினர் மட்டுமின்றி, ஐக்கிய ஜனதா கட்சியினரும் தேஜ் பிரதாப் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.வாஜ்பாய் மீது நிதிஷ்குமாருக்கு அலாதி பாசம் உண்டு.வாஜ்பாய் அமைச்சரவையில் நிதிஷ்,அமைச்சராகவும் இருந்துள்ளார்.
லாலுவின் மூத்த மகன் செயலால், பீகாரில் கூட்டணி கட்சிகளிடையே உரசல் ஏற்பட்டுள்ளது.அந்த பூங்காவில் வாஜ்பாய் சிலையும் உள்ளது.அந்த சிலை அகற்றப்படுமா? தொடர்ந்து அந்த பூங்காவிலேயே இருக்குமா? என தெரியவில்லை.
000