ஜுலை, 11-
இளையதளபதி விஜயும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் ஏற்கனவே மாஸ்டர் எனும் சூப்பர் டூப்பர் படத்தை கொடுத்தனர்.மீண்டும் லியோ படத்தில் இணைந்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி யூடியூப்பில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படத்தின் புதிய அப்டேட் நேற்று வெளியானது. ‘லியோ’ திரைப்படத்தில் தனக்கான காட்சிகளை நடிகர் விஜய் நடித்து முடித்து விட்டார் என்பதே அந்த அப்டேட்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், விஜய்யுடன் நிற்கும் போட்டைவை பகிர்ந்து. இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி அண்ணா” என்றும் பதிவிட்டுள்ளார், லோகேஷ் கனகராஜ். தற்போது மற்ற நடிகர்களுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
மாஸ்டர், விக்ரம் என லோகேஷ், அடுத்தடுத்து ஹிட் படங்களை அளித்து வருவதால், லியோ படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
லியோ படத்தை முடித்து உள்ள விஜய் தமது மக்கள் இயக்கத்தில் 234 தொகுதி உறுப்பினர்களையும் சென்னைக்கு அழைத்த இன்று ஆலோசனை நடத்துகிறார். இது அவருடைய அரசியல் பயணத்திற்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது.
000