தமிழக நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சராக இருந்த வந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு இலாக்கா மாற்றப்படும் என தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், பி.டி.ஆர் திறம்பட நிதித்துறையை கையாண்டார்.
அவரை வேறு துறைக்கு மாற்றுவது சரியல்ல என சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் தொடர்ந்து கிளம்பின. இந்நிலையில், நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி குறித்தும் மருமகன் குறித்தும் அவர் பேசியவை, கட்சிக்குள் பெரும் புயலையே ஏற்படுத்தின.
இந்நிலையில், இன்று அதிகாலை தனது முகநூல் கணக்கின் பையோவை நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர், தமிழ்நாடு கூட்டாட்சியுள்ள திராவிடன் என அப்டேட் செய்திருந்தார்.
இவரது இந்த பையோ அப்டேட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், பி.டி.ஆர் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.