June 01, 2023
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.83.50 குறைந்து சென்னையில் ரூ.1,937க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ .83.50 ஆக குறைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்கின்றன. அதன்படி நடப்பு மாதத்திற்கான அறிவிப்பின்படி, சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 84 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 937 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்து வருவதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.