உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முந்தைய அரசால் தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக 10.5% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார் .
சட்டப்பேரவையில்
பாமக உறுப்பினர் ஜி.கே.மணி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அளித்த பதிலில் முதல்வர் ஸ்டாலின் இதனை தெரிவித்து உள்ளார்.
மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் ஆணையம் அமைக்கப்பட்டதாக கூறிய முதலமைச்சர்,
அந்த ஆணையம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.