படத்தை அடுத்து விஜயும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணையும் இரண்டாவது படமான ‘லியோ’ 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிர்மாண்டமாக தயாராகியுள்ளது.
இன்னும் 6 நாட்கள் தலக்கோணத்தில் ஷுட்டிங் நடத்தி விட்டால் படத்தின் ஆயுத பூஜை தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டம்.
கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார் .
கேங்ஸ்டர் படமான லியோவில் இந்தி நடிகர் சஞ்சய்தத், அர்ஜுன்,மன்சூரலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ,பாபு ஆண்டனி ஆகிய அரை டஜன் பேர் வில்லன்களாக நடிப்பதால் படத்தில் ரத்த சகதிக்கும், துப்பாக்கி சத்தத்துக்கும் பஞ்சம் இருக்காது என்பது பலரது கணிப்பு.
இதனை மெய்ப்பிப்பதாக, அண்மையில் வெளியான படத்தின் போஸ்டர் குலை நடுங்க வைக்கும் வகையில் உள்ளது.பனிமலை பின்னணியில் விஜய் ஆக்ரோஷம் காட்டி யாரையோ சுத்தியலால் அடித்து துவைக்க, அவரது பின்னால் ஓநாய் ஓலமிடுவது போன்றுஅந்த போஸ்டர் குருதியில் குளித்து வந்தது போல் பயமுறுத்துகிறது.
இந்த போஸ்டர் அமெரிக்காவின் வெப்தொடரான ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ போஸ்டரை நினைவு படுத்துவதாக உள்ளது. அந்த வெப் தொடர் போஸ்டரில், கிட் ஹாரிங்டன் என்பவர் கத்தியுடன் நிற்க, அவர் அருகே ஓநாய் வாய் பிளந்து நிற்கும்.
அமெரிக்க வெப் தொடர் போஸ்டரை, விஜயும்,லோகேஷ் கனகராஜும் காப்பி அடித்துள்ளதாக குறிப்பிட்டு, விஜயின் தொழில்முறை எதிரியான அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரு போஸ்டரையும் வெளியிட்டு கிண்டல் அடிப்போதோடு, கதை எந்த படத்தின் காப்பியோ என வினாவும் எழுப்பியுள்ளனர்.
போஸ்டரோடு, ’நா ரெடி ‘எனும் பாடலையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடலில் விஜயுடன் நூற்றுக்கும் அதிகமான நடனக்கலைஞர்கள் டான்ஸ் ஆடியுள்ளனர்.
சிகரெட் பிடித்தபடி, 50 விநாடிகள் இந்த பாடலில் விஜய் சிங்கிள் டேக்கில் நடனம் ஆடி உள்ளார்.இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
‘விழா நடத்தி மாணவர்களுக்கு போதனை வகுப்பு நடத்தும் விஜய், படத்தில் சிகரெட் பிடித்து அவர்களுக்கு புகையிலை பழக்கத்தை கற்றுக்கொடுக்கலாமா?’ என விளாசி தள்ளுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இதனிடையே விஜய் மீது சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் சென்னை காவல் துறை ஆணையருக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்று அனுப்பியுள்ளார்.
’நா ரெடி பாடல் போதைப்பொருள் பழக்கம் மற்றும் ரவுடியிசத்தை ஊக்குவிப்பதாக உள்ளது.இதனால் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
’விஜய் படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் இது போன்ற சர்ச்சைகள் உருவாகுவது வழக்கம் தான்.அதில் ஒரு ரகம் தான் இந்த புகார் ‘’ என அலட்சியாமாக சொல்கிறார்கள், அவரது ரசிகர்கள்.