விரும்பத்தகாத தொழிலதிபர்களை சந்திக்க ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு செல்வார் என்பதற்கு 10 உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும் என்று முன்னாள் காங்கிரஸ்காரர் குலாம் நபி ஆசாத் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த தினங்களுக்கு முன் டிவிட்டரில், அதானி பெயருடன், காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரெட்டி, ஹிமாந்தா பிஸ்வா சர்மா மற்றும் அனில் அந்தோணி ஆகியோரின் பெயர்களை இணைத்து செய்து பதிவேற்றம் செய்து இருந்தார்.
ராகுல் காந்தியின் டிவிட்டுக்கு குலாம் நபி ஆசாத் பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்தார். குலாம் நபி ஆசாத் அந்த பேட்டியில், ராகுல் காந்தி உள்பட தொழிலதிபர்களுடன் முழு குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது. விரும்பத்தகாத தொழிலதிபர்களை சந்திக்க அவர் வெளிநாட்டுக்கு செல்வார் என்பதற்கு 10 உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும் என்று தெரிவித்தார். ஆனால் மோடி மீதான விசுவாத்தை வெளிப்படுத்தும் வகையில் புதிய ஆழங்களுக்கு விழுகிறார் என்று ஆசாத்தை காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், ஒவ்வொரு நாளும் குலாம் நபி ஆசாத் தனது உண்மையான குணத்தையும், மோடி மீதான விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் புதிய ஆழங்களுக்கு விழுகிறார். காங்கிரஸ் தலைமை மீதான அவரது இழிவான அறிக்கைகள் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்ற அவரது விரக்தியை பிரதிபலிக்கிறது. அவர் பரிதாபத்திற்குரியவர் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும் என்று பதிவு செய்துள்ளார்.