செப்டம்பர்,04-
லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் , இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார்.இது- விஜய்க்கு 68-வது படம். அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் விஜய் அசத்த உள்ளார்.
அஜித்துக்கு மங்காத்தா எனும் வெற்றிப்படத்தை கொடுத்த வெங்கட் பிரபு, விஜய்க்கும் ஒரு சூப்பர் டூப்பர் படத்தை கொடுக்க வேண்டும் என ஓடி ஓடி உழைக்கிறார். இந்த படத்தில் விஜய் தோற்றம் ஹாலிவுட் தரத்தில் உருவாகிறது. புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விஜயின் தோற்றத்தை பொலிவாக்க, விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளனர்.
இந்த படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். தந்தை விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இவர்கள் ஏற்கனவே குஷி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். படம் சூப்பர் ஹிட். .இந்த நிலையில், விஜய்க்குஅம்மாவாக நடிக்க ஜோதிகா மறுத்து விட்டார்.
இதனால் ’புன்னகை இளவரசி ’சினேகாவிடம் இயக்குநர் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தினார். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். விஜய் ஜோடியாக 2003-ம் ஆண்டு வெளியான ’வசீகரா’ படத்தில் சினேகா நடித்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜயும் சினேகாவும் இணைகிறார்கள். ரசிகர்களை வசீகரிக்கட்டும்.
000