வேங்கைவயல் விவகாரத்தின் உண்மைக் காரணம் பற்றி தமிழக அரசு விளக்கம்.

ஜனவரி-28,

வேங்கை வயல் குற்றத்திற்கு சாதிய மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் கிடையாது என்று தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரும் மனுக்கள் மீது உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வேங்கைவயலில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மற்றவர்களுடன் பேசிய செல்போன் உரையாடல்கள் உண்மையானது என்று கூறினார்.

“வேங்கைவயல் வழக்கில் 196 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்து வேங்கைவயல் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

31 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்தனர்.

வேங்கை வயல் குற்றத்திற்கு சாதிய மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் கிடையாது” இவ்வாறு அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.,

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *