ஷங்கருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை கமல் பரிசளித்த ரகசியம்.

கமல்ஹாசனும் ஷங்கரும் இந்தியன் படத்தில் முதன் முதலாக கை கோர்த்தனர்.படம் இமாலய வெற்றி பெற்றது.இதன் தொடர்ச்சியாக இந்தியன் -2 படத்தில் இரு ஜாம்பவான்களும் இணைந்துள்ளனர்.

லைகா நிறுவனமும் ,உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனமும் கூட்டாக இந்தப்படத்தை தயாரிக்கிறது.அனிருத்இசை அமைக்கிறார். காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா,சித்தார்த், ராகுல் பிரித்சிங் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

கொரோனா உள்ளிட்ட தடைகளால் 6 ஆண்டுகளாக நீடித்த இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டம்.

இந்தியன் -2 படத்தின் சில காட்சிகளை கமலஹாசனுக்கு திரையிட்டு காட்டியுள்ளார், ஷங்கர்.அவது மேக்கிங் உலகநாயகனை அசர வைத்து விட்டது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டுள்ளார்.

‘இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள், ஷங்கர்.இதுவே உங்கள் உச்சமாக இருக்கக்கூடாது என்பது என் அவா.இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை.இதையே உச்சமாக கொள்ளாமல்,திமிறிஎழுங்கள், பல புதிய உயரங்களை தேடி’

இவ்வாறு சிலாகித்துள்ளார்,கமல்.

அது மட்டுமல்ல. ஷங்கருக்கு விலை உயர்ந்த PENERAI கைக்கடிகாரத்தை பரிசாக அளித்துள்ளார்.இதன் மதிப்பு 8 லட்சம் ரூபாய்.

இதற்கு முன்னர் கமலை வைத்து  விக்ரம் எனும் சூப்பர் டூப்பர் சினிமாவை தந்தார் லோகேஷ் கனகராஜ். இதனால் அவருக்கு விலை உயர்ந்த காரை அன்பளிப்பாக கமல் அளித்திருந்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *